நீங்கள் தனியாக இல்லை

நீங்கள் தனியாக இல்லை

நீங்கள் தனியாக இல்லை

~300,000,000

பேருக்கு சிக்கிள் செல் அணுக்கள் உள்ளன*

~6,400,000

பேருக்கு சிக்கிள் செல் நோய் உள்ளது

~300,000

ஒவ்வொரு ஆண்டும் 3,00,000 குழந்தைகள் சிக்கிள் செல் நோயுடன் பிறக்கின்றன

*சிக்கிள் செல் அணுக்கள் உள்ளவர்களுக்கு ஒரு இயல்பான ஹீமோகுளோபின் மரபணு மற்றும் 1 சிக்கிள் ஹீமோகுளோபின் மரபணு உள்ளது

சிக்கிள் செல் நோய் உள்ளவர்களுக்கு 2 ஹீமோகுளோபின் மரபணுக்கள் உள்ளன மற்றும் அவர்களுக்கு சிக்கிள் செல் நோயின் அறிகுறிகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

வேறு பலரும் சிக்கிள் செல் நோயால் அவதிப்படுகிறார்கள்

சிக்கிள் செல் நோய் பரம்பரையாகப் பெறும் நோயாகும் மற்றும் இது உலகில் காணப்படும் மிகவும் பொதுவான மரபணு ரத்த கோளாறு ஆகும்.

சிக்கிள் செல் மரபணு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மலேரியா காணப்பட்ட இடங்களில் தோன்றியது. அது தொடர்ந்து பரவி வருகிறது. இது ஆப்பிரிக்காவில் தோன்றியதால், சிக்கிள் செல் நோய் அடிப்படையில் ஆப்பிரிக்க பாரம்பரியத்தைக் கொண்டவர்களை பாதிக்கிறது. பின்னர் சிக்கிள் செல் மரபணு மலேரியாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்று நிரூபிக்கப்பட்டது.

இடப்பெயர்வு காரணமாக, மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ளவர்கள், மத்திய கிழக்கு, காகசியன், இந்தியர், ஹிஸ்பானிக், நேட்டிவ் அமெரிக்கன், மற்ற பாரம்பரியங்களைக் கொண்டவர்களையும் பாதிக்கலாம்.

Map of the prevalence of sickle cell disease around the world Map of the prevalence of sickle cell disease around the world

இடப்பெயர்வு சிக்கிள் செல் நோய் பரவலை மாற்றுகிறது

மக்கள் தங்கள் நாட்டிலிருந்து மற்ற பகுதிகளுக்கு இடம்பெயரும்போது, சிக்கிள் செல் நோய் வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற உலகின் மற்ற பகுதிகளையும் பாதிக்கிறது.

2010 முதல் 2050 வரை சிக்கிள் செல் நோயுடன் பிறக்கக் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 30% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கிள் செல் நோய் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்

சிக்கிள் செல் நோய் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பற்றிய கட்டுக்கதைகளை எதிர்கொள்வது முக்கியமானது. பின்வரும் கட்டுக்கதைகள் பொதுவானவை மற்றும் அவை இந்த நோயுள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தினர், பராமரிப்பாளர்கள், நண்பர்கள், ஆரோக்கிய பராமரிப்பாளர்களை பாதிக்கலாம். உண்மையைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுக்கதை மீது க்ளிக் செய்யவும்.

கட்டுக்கதை: ஆஃப்ரிக்க பாரம்பரியம் கொண்டவர்களுக்கு மட்டுமே சிக்கிள் செல் நோய் வரும்

உண்மை: பெரும்பாலும் சிக்கிள் செல் நோய் ஆஃப்ரிக்க பாரம்பரியம் கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது என்றாலும், இது உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் பாதிக்கிறது.

கட்டுக்கதை: சிக்கிள் செல் நோய் ஒரு தொற்று நோயாகும்

உண்மை: சிக்கிள் செல் நோய் பாரம்பரியமாக பெறப்படும் ரத்தக் கோளாறு ஆகும். இது தொற்றுநோய் அல்ல!!! இது குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோரிடமிருந்து மட்டுமே கடத்தப்படுகிறது.

கட்டுக்கதை: சிக்கிள் செல் நோய் குறுகிய காலத்திற்கு ஏற்படும் நோயாகும்

உண்மை: சிலநேரம் ஏற்படும் வலி சிறிது நேரத்திற்கு மட்டுமே இருக்கும் என்றாலும், ஒருவர் பிறக்கும்போது ஏற்படும் சிக்கிள் செல் நோய் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

கட்டுக்கதை: ஒரே வகையான சிக்கிள் செல் நோய் மட்டுமே உள்ளது

உண்மை: உண்மையில் பலவகை சிக்கிள் செல் நோய்கள் உள்ளன. இதில் எச்பிஎஸ்சி, எச்பிஎஸ், பி-தலசிமியா, மற்றும் எச்பிஎஸ்எஸ் ஆகியவற்றைய உள்ளடக்கிய, ஆனால் இவற்றையே வரம்பாகக் கொண்டிராத இவை மிகவும் பொதுவான வடிவங்களாகும்.

கட்டுக்கதை: சிக்கிள் சிவப்பு ரத்த அணுக்கள் மட்டுமே வலியை ஏற்படுத்துகின்றன

உண்மை: வெறும் சிக்கிள் செல்களை விட மேலும் பல கதைகள் உள்ளன. வெறும் சிவப்பு ரத்த செல்கள் மட்டுமல்ல, சிக்கிள் செல் நோய் உடலின் மற்ற பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதன் பலனாகத்தான் வலி ஏற்படுகிறது.

கட்டுக்கதை: தேவையில்லை என்றாலும் கூட சிக்கிள் செல் நோய் உள்ளவர்கள் வலி மருந்துகளை தேடுகிறார்கள்

உண்மை: கடுமையான வலி ஏற்படலாம் மற்றும் மருத்துவ குறுக்கீடு தேவைப்படலாம். இது சிக்கிள் செல் நோயின் பொதுவான சிக்கலாகும். பெரும்பாலும் இந்த வலி சிக்கல்களுக்கு மருந்துச் சீட்டில் வாங்கும் மருந்துகள் தேவைப்படும்.

கட்டுக்கதை: சிக்கிள் செல் நோயாளிகள் ஊக்கமற்றவர்கள் மற்றும் தன்முனைப்பு இல்லாதவர்கள்

உண்மை: சிக்கிள் செல் நோய், நோய் வாய்ப்பட்டவர்களின் உடல், மனம், ஒட்டுமொத்த வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியது. சோர்வு, பயபதட்டம் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படலாம். இதனை சிக்கிள் செல் நோய் பற்றி தெரியாதவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.

இப்பொழுது நீங்கள் NotAloneInSickleCell.com-ஐ விட்டு வெளியேறுகிறீர்கள்

நீங்கள் NotAloneInSickleCell.com இணையதளத்தை விட்டு வெளியேறி மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் இணையதளத்தில் நுழைய இருக்கிறீர்கள். இந்த மூன்றாம் தரப்பு இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கு நோவார்டிஸ் பொறுப்பேற்காது மற்றும் கட்டுப்படுத்தாது.